மொழி மாற்றம் செய்ய இங்கே வரவும் .

Sunday, August 28, 2011

ஞானஸ்நானம் என்றால் என்ன ?

ஞானஸ்நானம் என்றால் என்ன என்பதுவும் எதற்காக கிறிஸ்த்தவர்கள் இதை எடுக்கிறார்கள் என்பதுவும் பற்றி அநேகருக்கு சரியாக புரியவில்லை .
(உள் நுழைக.)

ஞானஸ்நானம் 
 ஜேசு இந்த பூமியில் வாழ்ந்த பொழுது நிக்கொதேமு என்னும் யூத போதகனிடம் 'ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராச்சியத்தில் பிரவேசிக்க மாட்டான் 'என்று சொன்னார் .அதற்கு  நிக்கொதேமு ஒருவன்   முதிர் வயதாயிருக்கையில் எப்படி மறுபடியும் பிறக்க முடியும் அது சாத்தியமில்லையே என்று சிந்தித்தான் .அதற்கு ஜேசு நீ வேத போதகனாய் இருந்தும் இதை அறியவில்லையா என்றார் .ஆம் இதைக்குறித்த அறிவு இன்றும் அநேகருக்கில்லை.  அதற்கு ஜேசு ஒருவன் ஆவியினாலும் ஜலத்தினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராச்சியத்தில் பிரவேசிக்கமாட்டன் என்று சொன்னார் .ஆம் ஞானஸ்நானம் என்பது  ஆவியினாலும் ஜலத்தினாலும் பிறப்பதாகும்.   ஒருவன் மாமிசத்தில் வாழ்கின்ற நாட்களில் பாவத்தினால் தேவனுக்கு தூரமாயும் ,நரக தண்டனைக்கு பாத்திரமானவநாயும் இருக்கிறான் .அவன் தன பாவ வாழ்வை விட்டு மனம் திரும்பி ஜேசுதான் தன்னுடைய பாவங்களுக்காக சிலுவையில் ஜீவனை கொடுத்தவர் என்றும் அவருடைய இரத்தத்தில் மட்டுமே தன்னுடைய பாவங்களுக்கு மன்னிப்பு உண்டு என்றும்   அவர் உயிரோடு எழுந்தது இன்றும் ஜீவிக்கிறார் என்றும் தனது  இருதயத்தில் விசுவாசித்து வாயினால் அறிக்கை செய்யும் பொழுது அவன் இரட்சிக்கப்படுகிறான் .இதற்கு அடையாளமாக கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தில் நீரில் மூழ்குதல் பாவத்திற்கு அவன் செத்து அடக்கம் பண்ணப்படுவதட்கும் மீண்டும் எழும்புதலானது பாவமில்லாதவனாய் ஜீவனோடு அவன் எழும்புதல  யும் குறிக்கின்றது .இந்த்த நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் அவன் மேல் இறந்குவதனால் அவன் ஆவியினால் பிறக்கிறான் .இதுதான் ஆவியினாலும் ஜலத்தினாலும் பிறப்பதாகும் .இது முதல் அவன் தேவனுடைய இராச்சியத்தில் குழந்தையாக வழரத் தொடங்குகிறான் .இந்த உடன்படிக்கைக்கு உண்மையாய் வாழும் மனிதன் வெற்றியுள்ள வாழ்வு வாழ்ந்தது ஜேசுவை மகிமைப்படுத்துவான் .

No comments:

Post a Comment